குப்பை பிரச்சினைக்கு தேர்தல் நடத்தாமையே காரணம் – ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றச்சாட்டு

239 0

அரசாங்கத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாத உள்ளுராட்சி மன்றங்களில் கூட தேர்தலை நடாத்த அரசாங்கம் அஞ்சியுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தாமையே டெங்கு பிரச்சினைக்கு தெளிவான காரணம்.

குப்பை பிரச்சினைக்கு காரணம் உள்ளூட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையே காரணம்.

முறையான நிர்வாகம் இல்லை. செயன்முறைகள் இல்லை.

நாடு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்படாத உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு அரசாங்கம் இவ்வாறு அஞ்சுகின்றது. என்றால் ஆட்சியை ஏற்றும் வகையில் உள்ள பொது தேர்தலுக்கு எவ்வாறு அஞ்சும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a comment