தகவல் அறியும் சட்டம் மக்களுக்கு சிறந்த பயனை அளிக்க வேண்டும்

233 0

தகவல் அறியும் உரிமைச் சட்டங்கள் தொடர்பாக பொது மக்களுக்கான சிறந்த பயன்களை பெற்றுக் கொள்ள கூடிய வகையில் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர் திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் ஊடகவியாளர்கள் எதிர்காலத்தில் முன் வரவேண்டும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ரமணி ரூபரத்தன தெரிவித்தார்.

குறிப்பாக தற்போது இந்த சட்டமானது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதனால் அது தொடர்பாக வடக்கில் தெளிவான நிலைப்பாட்டில் மக்கள் இருக்கவில்லை.

அதுதொடர்பாக விடயங்கள் தெளிவாக தெரியப்படுத்தப்பட வில்லை எனவே இது பற்றி ஆக்கப் பூர்வமான செயற்பாடுகளை எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக இலங்கையில் இந்த சட்டமுறையில் ஏனைய நாடுகள் முன்மாதிரியாக கண்டுள்ளது.
அதனை ஐனாதிபதி, பிரதமர், ஊடகத்துறை அமைச்சர் ஆகியோர்கள் பங்களிப்பு சிறப்பானதாக உள்ளது. ஆகையினால் அவ்வாறான ஒரு துரித பாதையில் எமது நாட்டினை கொண்டு செல்லுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு மற்றும் அரச தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக வட மாகாணத்தினை பிரதித்துவப்படுத்தும் மாவட்ட செயலாளர்கள், மற்றும் பிரதேச செயலாளர், திணைக்கள உயர் அதிகாரிகள், மாகாண அமைச்சின் செயலாளர்கள் மற்றும் ஊடகவியாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு ஒன்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் உதவிப்பணிப்பாளர் கிறீஸ்டி ஐயந்த தலைமையில் நடைபெற்றது..

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ரமணி ரூபரத்தன கலந்து கொண்டார். இங்கு தகவல் உரிமைச் சட்டத்தில் எதிர்காலத்தில் முன்னேடுக்கப்பட வேண்டிய மக்களின் வகிபாகம், மக்களுக்கான உரிமைக்கான அடிப்படை, புதிய அரசியல் சாசனத்தில் மக்களுக்கான உரிமைச் சட்டங்கள், மற்றும் ஊடகவியாளளுக்கான தகவல் உரிமைச் சட்டத்தில் காணப்படவேண்டிய முதன்மைகள்,போன்ற விடையங்களை முன்படுத்தி இவ் கருத்தரங்குகளும் சிரேஸ்ட ஊடகத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகளினால் நிகழ்த்தப்பட்டன.

இந்தச் செயலமர்வு எதிர்வரும் மாதங்களில் கிழக்கு மாகாணம், தென்மாகாணம் மற்றும் ஊவா மாகாணத்தில் நடைமுறைப்படுத்த எண்ணியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த செயமர்வில் வடமாகாணத்தில் 05 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், அரச திணைக்கள உயர் அதிகாரிகள் மாகாண அமைச்சின் செயலாளர்கள், ஊடகவியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment