பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை புனர் நிர்மானம் செய்தல், அமைச்சர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்தல், பல்வேறு துறைசார்ந்த விடயங்களுக்கு மேலதிக நிதியை வழங்கல் உள்ளிட்ட பல தேவைகளுக்காக அவசர நிதி ஒதுக்கும் மற்றுமொரு குறைநிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியிருந்த நிலையில் இந்த பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேலதிக நிதி ஒதுக்கல் ஊடாக, ஆண்டுக்காக மதிப்பிடப்பட்டு பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள முழு செலவினத் தொகையில் அதிகரிப்பு ஏற்படப் போவதில்லை என்று இந்த குறைநிரப்பு பிரேரணை யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் திருத்தம் செய்வது தொடர்பிலும் இந்த பிரேரணையில் உள்வாங்கப்பட்டுள்ளது.