அரசமைப்பு ஆதரவளிக்காவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்றமுடியாது – மனோகணேசன்!

350 0

வடக்குக் கிழக்கு இணைப்பில்லை, சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு இல்லை, தற்போது பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையில் எந்த மாற்றமும் இல்லை, இவ்வளவு விடயங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் முன்வைப்பது போலியான வாதங்களேயென தேசிய சகவாழ்வு அரசகரும மொழிகள் அமைச்சர்மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பி.எம்.ஐ.சி.எச். இல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், உத்தேச அரசியலமைப்பு நாட்டிற்கு அவசியம் தேவையெனவும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் இந்த நாட்டை யாராலும் காப்பாற்றமுடியாது.

இந்த அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு இணைக்கப்படமாட்டாது. அத்துடன் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வும் இதில் உள்ளடக்கப்படவில்லை. பௌத்த மதத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அத்துடன் அண்மையில் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தமிழ் மக்கள் பலவீனமான நிலையில் உள்ளதால் அரசாங்கம் தருவதைப் பெற்றுக்கொண்டு மேலதிகமாகப் பெறுவதற்கு ஜனநாயக ரீதியில் போராடவேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் கருத்துத் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment