எங்கள் இனத்திற்காக போராடிய மாவீரர்களின் கல்கறைகள் மேல் ஏறி நின்று கொண்டு எப்படி நல்லினக்கத்தை ஏற்படுத்துவது

437 0

27(13)தமிழ் இனத்தின் விடிவுக்காக போராட்த்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் தூயிலும் இல்லங்கள் புணரமைக்கப்படடும் அதே வேளை இறுதி யுத்தத்தில் உயிரிளந்த அப்பாவி பொது மக்களை நினைவு கூறுவதற்கான நினைவு தூபி ஒன்றும் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் செயலணியிடம் வடமராட்சி பொது மக்கள் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

நல்லிணக பொறிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான செயலணியில் அமர்வு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இவ்வமர்வில் கலந்து கொண்ட பொது மக்களினாலேயே மேற்படிக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கை தொடர்பாக அவர்கள் மக்கள் அங்கு மேலும் கூறுகையில்:- தமிழ் இனத்தில் விடுவிக்கான போராட்த்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீர்களை நினைவு கூறுவதற்கான அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது. அங்கிருந்து கல்லறைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு அதன் மேல் கட்டடங்கள் நிர்மானிக்கப்பட்டும், இராணுவ முகாங்கள் அமைக்கப்பட்டும் காணப்படுகின்றது.

மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்ட செயற்பாடானது மக்களை மனரீதியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் இனத்திற்கான போராடிய தமிழர்களின் உறவுகள், பிள்ளைகளின் கல்கறைகள் மேல் ஏறி நின்று கொண்டு நல்லிணக்கம் ஏற்படுத்துங்கள் என்று கூறினால் எங்கிருந்து நல்லிணகம் வரும். மேலும் யுத்தத்தில் உயிரிளந்த அப்பாவி பொது மக்களை நினைவு கூறுவதற்கான நினைவு தூபி ஒன்றும் அமைக்கப்பட வேண்டும்.

அத்தூபிக்குச் சென்று பொது மக்கள் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லாமல் சுதந்திரமான நினைவு கூறல்களை நடாத்துவதற்கான நிலமையும் இங்கு உருவாக்கப்பட வேண்டும். இராணுவ வீரர்கள் உயிரிளந்ததை பெரும்பான்மை மக்களுடன் சேர்ந்து அரசாங்கம் நினைவு கூறுகின்றது. யுத்த வெற்றி விழாவினையும் அரசாங்கம் விமர்சியாக நடாத்தி வருகின்றது. இவ்வாறான அரசாங்கத்தின் செயற்பாடுகளை தமிழ் மக்கள் விருப்பவில்லை. தமிழ் மக்களுக்கும் நினைவு கூறுவதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டால் மட்டுமே நல்லிணக்கம் என்பது சாத்தியப்படும் என்றனர்.