செப்டம்பர் நடுப் பகுதியில் அரசாங்கத்திலுள்ள 18 அமைச்சர்கள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இணையவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.
இன்று நெலும் மாவத்தை பகுதியில் இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
தற்போது வரை பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் பிரியந்த ஜெயரத்ன ஆகியோர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித்த அபேகுணவர்த்தன மற்றும் பியல் நிஷாந்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.