பர்பேசுவல் ட்ரேசரிஸ் நிறுவனத்திற்கு தடை!

260 0

பர்பேசுவல் ட்ரேசரிஸ் லிமிட்டட் (Perpetual Treasuries Limited) நிறுவனத்தை இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை தற்காலிகமாக தடை செய்துள்ளது.

இதற்கமைய, ஆறு மாதங்களுக்கு வர்த்தக மற்றும் முதனிலை வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம், உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பவற்றின் கீழான நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க, 2017.07.06ம் திகதி (இன்று) மாலை 4.30 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment