யாழ். பல்கலையில் இராணுவத்தினர் பந்தல் அமைக்கும் பணியில்!

274 0

யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் கலாச்சார நிகழ்வுகள் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், நேற்றையதினம் இராணுவ வாகனங்களில் யாழ். பல்கலைக்கழகத்துக்குள் பந்தல் அமைப்பதற்கான பொருட்கள் கொண்டுசெல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

அதன்பின்னர், பல்கலைக்கழகத்தின் சிங்கள மாணவர்களுடன் இராணுவத்தினர் சிவிலுடையில் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றர்.

யாழ். பல்கலைக்கழகத்துக்குள் இராணுவத்தினருக்கு என்ன வேலை? இது தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

Leave a comment