இன்று பாராளுமன்றில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கடற்தொழிற்சட்டத்திற்கு தமிழக மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டத்திற்கு, இந்திய அரசு கன்டனம் தெரிவித்து தடுத்து நிறுத்வேண்டும் என தமிழக மீனவர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் வெளிநாட்டு படகுகள் எல்லை தாண்டினால் இரண்டு மில்லியன் ரூபா முதல் 20 மில்லியன் ரூபாவரை அதிகபட்ச தண்டத்தை வசூலித்து எல்லை தாண்டுவதை தடுக்கவும், தடைசெய்யப்பட்ட மீன்பிடிப்பிற்கு எதிராக கொன்டுவரப்படவுள்ள கடற்தொழில் சட்டத்தை அமுல்படுத்தவும் சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது.