வறட்சி காலநிலை காரணமாக பெரும்போக பயிர் செய்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மகாவலி பீ வலயத்தின் வெலிக்கந்த செயற்றிட்ட முகாமைத்துவ காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று வருட காலப்பகுதியில் மத்திய மலைநாட்டை தவிர ஏனைய மாகாணங்களுக்கு உரிய மழை வீழ்ச்சி கிடைக்க பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.