காணாமற்போதல் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் – லக்ஷ்மன்

275 0

பலவந்தமாக காணாமல் போதலில் இருந்து அனைவரும் பாதுகாப்பு பெறும் சர்வதேச சாசனம் குறித்த சட்டமூலம், எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கடாவிருந்த நிலையில், முன்வைக்கடாது என ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

குறித்த சட்ட மூலத்தின் உள்ளடக்கங்கள் குறித்து தெளிவுப்பெறும் வரையில் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காதிருக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கி இருப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

எனினும், இந்த சட்டமூலம் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்மை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே லக்ஷ்மன் கிரியெல்ல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வெளியான செய்தி பொய்யானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment