அமெரிக்காவில் செயற்படுத்தப்படும் மரபணு தொழில்நுட்பத்தின் மூலம், நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை இந்நாட்டில் செயற்படுத்த சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
மரபணு தொழில்நுட்பம் மூலம் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடிய முறை தொடர்பில், இரு வாரங்களினுள் அறிக்கையொன்றை தயாரித்து, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு கையளிக்கவுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.
இந்த சிகிச்சை முறைக்காக தனியான பிரிவொன்றை நிறுவ உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறை மூலமாக நோயை ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் உயிரணுக்களால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவுள்ள நிலையில், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இதன் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.