மருத்துவ சபையின் மனு விசாரணையில் தலையிட அரச மருத்துவ அதிகாரிகளுக்கு அனுமதி

375 0

இலங்கை மருத்துவ சபையால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணையில் தலையிட்டு விளக்கமளிக்க, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு, உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில், மேன்முறையீட்டு நீதிமன்றம் பெற்றுக்கொடுத்திருந்த தீர்ப்பை வலுவிழக்கச்செய்யுமாறு கோரி இலங்கை மருத்துவ சபை, உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.

குறித்த மனு உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரச மருத்துவ அதிகாரிகள் குறித்த விசாரணையின் போது தலையிட அனுமதி கோரியிருந்தனர்.

அதன்படி , அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு குறித்த விசாரணைகளின் போது தலையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment