பேலியகொடை – நான்காம் கட்டை கறுத்த பாலத்திற்கு அருகாமையில் 11 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
குறித்த கேரளா கஞ்சாவை முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்ல முற்பட்ட போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொடை காவல்நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளனர்.