இலங்கையின் மிகப்பெரிய மாற்றுசக்தி மின் நிலையத்துக்கான வேலைத்திட்டம், கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் இன்று காலை பூநகரி கௌதாரிமுனை மன்னித்தலை செபஸ்ரியார் ஆலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து குறித்த மாற்றுசக்தி மின் நிலையம் அமைய இருக்கின்ற இடத்தையும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.காற்று, சூரிய ஒளி ஆகியவற்றைகொண்டு மாற்று மின்சக்தி நிலையங்களை உருவாக்குவதே குறித்த திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் சூரியசக்தி மூலம் எண்ணூறு மெஹா வோல்ட்டும் காற்றலை மூலம் இருநூற்று நாற்ப்பது மெஹா வோல்ட்டும் பெறக் கூடிய திட்டமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மூன்று பிரிவுகளாக இவ் வேலைத்திட்டம் நடைபெற உள்ளது அத்துடன் முதற்கட்டமாக ஒகஸ்ட் மாதம் சுமார் இருநூற்று எழுபது மெஹா வோல்ட் பெறக்கூடியவாறு மாற்றுசக்தி திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சின் அதிகாரிகள், மாவட்ட அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.