எட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

287 0

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த எட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் கணேஷ், மதன், பூபாலன், சதீஸ், அர்ஜூனன் ஆகியோர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர் என தமிழக ஊடகமான தினமலர் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 35 நாட்டிகல் தொலைவில் சோயுபு என்பவரது விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகமுத்து, அய்யாமுத்து, இராமமூர்த்தி ஆகியோரையும் இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a comment