சயிட்டம் விவகாரம் தொடர்பாக இலங்கை வைத்திய சபை தாக்கல் செய்த மனுவில் தலையிட்டு தகவல் அளிக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
நேற்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, அச் சங்கத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.