குற்றத்தை ஒப்புக் கொண்டார் சரண்!

296 0

சொத்துக்கள் மற்றும் உடமைகள் குறித்த விபரங்களை வெளியிடாமல் இருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன ஒப்புக்கொண்டுள்ளார். 

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக செயற்பட்ட காலத்தில், சரண குணவர்தன, தமது சொத்து விபரங்களை வெளிப்படுத்த தவறியதாக குற்றம் சுமத்தி, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இன்று இந்த வழக்குகள் கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, தான் குற்றத்தை ஒப்புக் கொள்வதாக சந்தேகநபர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். இதையடுத்து, இவருக்கான தண்டனை அறிவிப்பு, இம் மாதம் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபரது கைரேகையை பெற்று, அவரது முன்னைய குற்றச்சாட்டுக்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment