வித்யாவின் உயிரிழப்பிற்கான காரணத்தை கூறிய சட்ட வைத்திய அதிகாரி

398 0

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தலையின் பின்புறத்தில் தாக்கப்பட்டமை காரணமாக மாணவியின் மூளையின் உட்பகுதியில் இரத்தக் கசிவு ஏற்பட்டமை மற்றும் கழுத்து நெறிக்கப்பட்டமையே மாணவி வித்யாவின் இறப்புக்கு காரணம் என்று யாழ்ப்பாண வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சாட்சியமளித்துள்ளார். 

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மஹேந்திரனின் தலைமையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அண்ணாலிங்கம் ப்ரேமசங்கர் அகியோர் முன்னிலையில் யாழ் மேல் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விசாரணை நடவடிக்கையின் போது சட்ட வைத்திய அதிகாரி இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.

இந்தக் கொலை திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டது என்று மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக முதல் தடவையாக யாழ் மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றமை கூறத்தக்கது. குறித்த வழக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட ´ரயலட்பார்´ முறையில் தொடர் விசாரணை முறையில் இடம்பெற்று வருகின்றது.

Leave a comment