இலங்கை மற்றும் கனேடிய அரசாங்கங்களுக்கு இடையில் வேலை வாய்ப்பு தொடர்பில் எந்தவொரு ஒப்பந்தங்களும் இல்லை என, வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த பெண் ஒருவரை, அண்மையில், வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் கனேடிய அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள, ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாக, பாதிக்கப்பட்டவர்களிடம் குறிப்பிட்டுள்ள சந்தேகநபர், இதன் பொருட்டு ஒருவரிடம் இருந்து தலா 4 இலட்சம் ரூபாவையும் பெற்றுள்ளதாக, அமைச்சர் தலதா அதுகோரல மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இது போன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.