ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுடனும் கலந்துரையாட வாய்ப்பு கிடைக்காததன் காரணமாக அனைத்து தொழிற்சங்கங்களும் இன்றைய தினம் இணைந்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வதற்கான தினம் தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக கணிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை எண்ணெய் குதங்கள் உள்ளிட்ட 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பு கிடைக்காததால் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு தினம் குறித்து இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்த ஒன்றியத்தின் இணைப்பாளர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.