வடமாகாணத்தில் இராணுவ முகாம்களை அகற்றுவதானது, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று புதிய இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய இராணுவத் தளபதியாக பதவி ஏற்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
யுத்தம் இடம்பெறும் காலப்பகுதியலேயே இராணுவம் அங்கு பாரிய முகாம்களை அமைத்து நிலைகொண்டிருந்தது.
தற்போதைய கள நிரவங்களை இராணுவம் அறிந்து வைத்துள்ளது.
இந்த நிலையில் இரகசியத் தளங்கள் மற்றும் முக்கியமான முகாம்களைத் தவிர ஏனைய முகாம்களையும், இராணுவம் கைப்பற்றியுள்ள பகுதிகளையும் விடுவிப்பதால் எந்த தேசியப் பாதுகாப்பு பிரச்சினையும் ஏற்படாது என்று அவர் அறிவித்துள்ளார்.