தேவையான சட்ட திருத்தங்கள் செய்யப்பட்ட உடன் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்த தயார் – மஹிந்த

384 0
தேவையான சட்ட திருத்தங்கள் செய்யப்பட்ட உடன் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்த தயார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் பொறுப்பு நாடாளுமன்றத்திடமே இருக்கிறது.
அதன் உறுப்பினர்களே இது குறித்து தீர்மானிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் புதிய அல்லது பழைய முறையிலா தேர்தல் நடத்தப்படும்? என்ற கேள்விக்கு பதில் வழங்கிய அவர், எந்த முறையில் தேர்தல் நடத்துவது என்றாலும் தாம் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
இதற்கிடையில், உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்த காலதாமதம் ஆவதற்கு, தம்மீது குற்றம் சுமத்துவது அடைப்படையற்ற விடயம் என மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தமக்கு ஏற்றாற்போல் தொகுதி எல்லைகளை மீளமைத்துக் கொண்டதாலேயே இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இந்த தேர்தலை விரைவாக நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

Leave a comment