வடமாகாணசபையின் மூன்றரை ஆண்டுகால செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கான அமர்வு எதிர்வரும் 21 ம் திகதி நடைபெறும் என அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.
வடமாகாண சபையின் 98ம் அமர்வு இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. இதன்போதே அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இதன்போது அவை தலைவர் மேலும் குறிப்பிடுகையில், வடமாகாணசபை யின் மூன்றரை வருடகால செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான நாளை ஒதுக்கி தருமாறு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோர் வேண்டுகோள் விடுத்தமைக்கு அமைவாக இந்த விடயம் ஆராயபட்டு எதிர்வரும் 21ம் திகதி வடமாகாண சபையின் மூன்றரை வருட செயற்பாடு தொடர்பாக ஆராயலாம். அது ஒரு நாளாகவோ, 3 நாட்களாகவோ இருக்கும். எனவே 21ம் திகதி இந்த அமர்வு நடைபெறும் என்றார்.