சிரமம் ஏற்பட்டால் தீர்மானம் எடுத்து பொருளாதாரம் முன்னெடுக்கப்படும்!

248 0

பொருளாதாரத்தை தவறவிட்டு அரசியல் செய்ய முடியும் என பலர் எண்ணிக்கொண்டிருப்பதாகவும், சிரமம் ஏற்பட்டால் தீர்மானங்களை எடுத்து பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லப் போவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு, ஆட்டிகலை மாவத்தையில் இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இப்படியான சிரமமான பல தீர்மானங்கள் முதல் இரண்டு வருடங்களில் எடுக்கப்பட்டன.

எனினும் அபிவிருத்திக்கு முதல் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாது நாடு என்ற முறையில் முன்னோக்கி செல்வது மிகவும் கடினமானது.

கடந்த காலத்தில் கடனுக்காக வட்டியை கூட செலுத்த முடியாத நிலைமை இருந்தது என்பதை மறந்து விடக் கூடாது.இந்த நிலைமையில் இருந்து நாட்டை மீட்க சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு பாராட்டுகிறோம்.

சர்வதேச நாணய நிதியத்திடம் ஏன் நிதியுதவியை பெறுகின்றீர்கள் என பலர் கேட்டனர். எமக்கு தேவையான நிதியுதவியை பெற வேண்டும். எமக்கு தேவையான நிதியுதவியை அவர்கள் வழங்கினர்.சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ள முடிந்தது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment