நாட்டில் தற்போது பிரச்சினை இருப்பதாக ஊடகங்கள் காட்டுகின்றன!

230 0

நாட்டில் தற்போது பிரச்சினை இருப்பதாக ஊடகங்கள் காட்டி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை, நாட்டை நெருக்கடிக்குள் தள்ள எதிர்பார்ப்போருக்கு அதனை செய்ய இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.விருசுமித்துரு வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகளை இழந்த இராணுவத்தினரின் 192 குடும்பங்களுக்கு வீட்டு உரிமை பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் இன்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களை எடுத்துக்கொண்டால், எமது அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான தாக்குதலை தொடுத்து வருகின்றன.அரசாங்கம் நாளைய தினம் கவிழ்ந்து விடும் என்று ஊடகங்களில் காட்டப்படுகின்றது. எமது நோக்கம் மற்றும் கொள்கைகளுக்கு அமைய ஊடகங்களுக்கு இந்த சுதந்திரத்தை நாமே வழங்கினோம்.

நாங்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் இந்த நாட்டில் எத்தனை ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர்?

நாட்டில் உள்ள எத்தனை ஊடக நிறுவனங்கள் தீ வைக்கப்பட்டன?எத்தனை ஊடகவியலாளர்கள் காணாமல் போயினர்?

எத்தனை ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டுச் சென்றனர்? அனைத்தையும் தலைகீழாக மாற்றி ஊடகவியலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு பெற்றுக்கொடுத்த எமது அரசாங்கத்தின் ஆட்சியில் நாட்டில் பெரிய பிரச்சினை இருக்கின்றது என்று நாட்டுக்கு காட்டுகின்றனர். நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. நாட்டை சீர்குலைக்க முயற்சிப்போருக்கு நாங்கள் அதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment