நாட்டுக்குப் புதிய அரசியலமைப்புத் தேவையில்லை என்று மகாநாயக்க தேரர்கள் கூறுவதுநாட்டில் நல்லிணக்கம் தேவையில்லை என்று சொல்வதற்குச் சமனானது.
மகாநாயக்கதேரர்கள் தமது முடிவை உடனடியாக மீள்பரிசீலனை செய்யவேண்டும். இதுதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளாக இருக்கின்றது.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்றஉறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.புதிய அரசியலமைப்புத் தேவையில்லை என்று மகாநாயக்க தேரர்கள் நேற்றுமுன்தினம்கண்டியில் ஒன்றுகூடி முடிவெடுத்துள்ளனர். இதனை அரசிடம் நேரில்தெரியப்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தனர்.
மகாநாயக்க தேரர்களின் இந்தநிலைப்பாடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்றுசுமந்திரன் எம்.பியிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சி இப்போது ஆரம்பிக்கப்படவில்லை.ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே அது ஆரம்பிக்கப்பட்டது. நாட்டிலுள்ளஅனைவருக்கும் இது தெரியும்.இவ்வாறான நிலையில், மகாநாயக்க தேரர்கள் திடீரெனபுதிய அரசியலமைப்புக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அவர்கள் தங்களுடையஎதிர்ப்பு நிலைப்பாட்டை கண்டியில் ஒன்றுகூடி எடுத்துள்ளனர். இவர்கள் ஏன்திடீரென்று இவ்வாறு செயற்படுகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.நாட்டில் மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் புதிய அரசியலமைப்புஉருவாக்கப்பட வேண்டும்.
நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு தமிழ் மக்களின்பங்களிப்பில்லாமல் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் கொண்டுவரப்பட்டது, தமிழர்கள்மீது திணிக்கப்பட்டது. இதனால்தான் நீண்டகால ஆயுதப் போர் நடந்தது.
இந்த நிலைமைகளிலிருந்து நாடு மீளவேண்டுமாக இருந்தால் புதிய அரசியலமைப்பு அனைவரினதும் இணக்கப்பாட்டுடன் ஏற்படுத்தப்படவேண்டும். அப்படியானஇணக்கப்பாடுகள் தற்போது ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை, சிலநாட்களில் இறுதி செய்யப்படக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் புதிய அரசியலமைப்புத் தேவையில்லை என்று மகாநாயக்கதேரர்கள் கூறுவது நாட்டில் நல்லிணக்கம் தேவையில்லை என்று கூறுவதற்கு ஒப்பானது.எனவே, மகாநாயக்க தேரர்கள் தங்களது நிலைப்பாடுகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.இது எமது வேண்டுகோளாகவும் இருக்கின்றது என்றார்.