தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அமைப்பு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அமைப்புத் தேர்தல்கள் தொடங்கியுள்ளது. அமைப்புத் தேர்தல் முழுமையாக நடந்திட கீழ்கண்டவர்கள் மாவட்ட பார்வையாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உடனடியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு அதிகமான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். சேர்க்கப்பட்ட உறுப்பினர் படிவங்களை வட்டார, சர்க்கிள் வாரியாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிடமும், பின்னர் மாநில தலைமைக்கும் சமர்ப்பிக்கும் வகையில் உடனடியாக தங்களது சுற்றுப் பயணங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.
வடசென்னை-கீழானூர் ராஜேந்திரன், சென்னை கிழக்கு-உ.பலராமன், சென்னை மேற்கு- ஆர்.தாமோதரன், தென்சென்னை-டி.எல்.சதாசிவலிங்கம், திருவள்ளூர் வடக்கு- எம்.ஜோதி, திருவள்ளூர் தெற்கு-பெ.விஸ்வநாதன், திருவள்ளூர் மத்தி- டி.யசோதா, காஞ்சீபுரம் வடக்கு-ஆர்.ரங்கபூபதி, காஞ்சீபுரம் தெற்கு- இரா.மனோகர், காஞ்சீபுரம் மேற்கு-ஆர்.டி.குணாநிதி.
விழுப்புரம் வடக்கு- டாக்டர் ப.வள்ளல்பெருமான், விழுப்புரம் தெற்கு- டாக்டர் கே.ஐ.மணிரத்தினம், விழுப்புரம் மத்தி- விஜய் இளஞ்செழியன், கடலூர் வடக்கு-கே.ராணி, கடலூர் தெற்கு- பொன்.கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை வடக்கு-அருள் அன்பரசு, திருவண்ணாமலை தெற்கு-சி.டி.மெய்யப்பன், வேலூர் மாநகர்-டாக்டர் கே.விஜயன், வேலூர் கிழக்கு-டி.என்.முருகானந்தம், வேலூர் மேற்கு-எம்.ஏ.முத்தழகன், வேலூர் மத்தி-ஜி.ஜானகிராமன்.
கிருஷ்ணகிரி கிழக்கு- டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத், கிருஷ்ணகிரி மேற்கு- வாலாஜா அசேன், தர்மபுரி- பி.எஸ்.விஜயகுமார், நாமக்கல் கிழக்கு-எம்.ஆர்.சுந்தரம், நாமக்கல் மேற்கு-ஆர்.தேவதாஸ், சேலம் மாநகர்-கே.கோபிநாத், சேலம் கிழக்கு-எஸ்.எம்.இதாயத்துல்லா, சேலம் மேற்கு- அமெரிக்கை வி.நாராயணன்.
ஈரோடு மாநகர்-வாழப்பாடி இராம.சுகந்தன், ஈரோடு வடக்கு-ஆர்.வெங்கடாசலம், ஈரோடு தெற்கு- எம்.என்.கந்தசாமி, திருப்பூர் மாநகர்- வினய் கிருஷ்ணா, திருப்பூர் வடக்கு- டாக்டர் செழியன், திருப்பூர் தெற்கு- எம்.பி.எஸ்.மணி, கோவை மாநகர்- எல்.முத்துக்குமார், கோவை வடக்கு-எர்ணஸ்ட் பால், கோவை தெற்கு-ஜே.பி.சுப்பிரமணியன்.
நீலகிரி-வீனஸ் மணி, கரூர்- ஆர்.எம்.பழனிச்சாமி, திண்டுக்கல் மாநகர்- ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் கிழக்கு-சந்திரசேகரன், திண்டுக்கல் மேற்கு- திருப்பூர் செந்தில்குமார், தேனி- அக கிருஷ்ணமூர்த்தி, மதுரை மாநகர்- சொர்ணா சேதுராமன், மதுரை வடக்கு-டி.எஸ்.ராஜேந்திரன், மதுரை தெற்கு- வி.அருணகிரி, திருச்சி மாநகர்-துரை திவ்யநாதன், திருச்சி வடக்கு- கு.செல்வப்பெருந்தகை, திருச்சி தெற்கு-டி.புஷ்பராஜ்.
பெரம்பலூர்-என்.ஜெயப்பிரகாஷ், அரியலூர்- டாக்டர் சுப.சோமு, தஞ்சாவூர் மாநகர்-சி.கே.பெருமாள், தஞ்சாவூர் வடக்கு- டாக்டர் எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ், தஞ்சாவூர் தெற்கு- கே.எஸ்.அழகிரி, நாகப்பட்டினம் வடக்கு- ஏ.சந்திரசேகரன், நாகப்பட்டினம் தெற்கு-என்.சுந்தரம், திருவாரூர்-ஏ.எஸ்.சந்திரசேகரன், புதுக்கோட்டை வடக்கு-திருச்சி சந்திரன், புதுக்கோட்டை தெற்கு-ஆர்.சிங்காரம், சிவகங்கை-சி.சுவாமிநாதன், ராமநாதபுரம்-அரிமளம் சுந்தரராஜன்.
விருதுநகர் கிழக்கு-டி.ஏ.நவீன், விருதுநகர் மேற்கு- டி.ஏகம்பவாணன், தூத்துக் குடி மாநகர்-ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், தூத்துக்குடி வடக்கு- பி.வேல்துரை, தூத்துக்குடி தெற்கு- கே.ரவி அருணன், நெல்லை மாநகர்-திருச்சி வேலுச்சாமி, நெல்லை கிழக்கு- இராம.சுப்புராம், நெல்லை மேற்கு-வி.பாலையா, கன்னியாகுமரி கிழக்கு-ஏ.தமிழ்செல்வன், கன்னியாகுமரி மேற்கு-எஸ்.எஸ்.ராமசுப்பு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.