ஹட்டன் ஹைலண்ட்;ஸ் கல்லூரி 75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகிறது(காணொளி)

336 0

கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தலைவருமான வே.இராதாகிருஸ்ணனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய ஹட்டன் ஹைலண்ட்;ஸ் கல்லூரி 75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகிறது.

மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும்; 25 பாடசாலைகளை கணித விஞ்ஞான பாடசாலைகளாக தரம் உயர்த்தி அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்திற்குள் குறித்த பாடசாலை உள்வாங்கப்பட்டு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது அதன் வேலைத்திட்டங்கள் 50 வீதம் பூர்தியடைந்துள்ளதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த பாடசாலை கல்வி அமைச்சு மாகாண கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கபட்டு வரும் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற செயற்திட்டத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment