மாந்தை கிழக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள பகுதிகளில் வறட்சி நிலவும் பகுதிகளுக்கு குடிநீருக்கு  தட்டுப்பாடு (காணொளி)

295 0

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள பகுதிகளில் வறட்சி நிலவும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாந்தைகிழக்கு பிரதேச சபையின் செயலாளர் பா.சிவபாலராஜா தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக பல்வேறு பகுதிகளிலும் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

அந்த அடிப்படையில் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், கிணறுகளில் நீர் வேகமாக வற்றுவதனால் விவசாயம் செய்யமுடியாது தொழில்களை மேற்கொள்ளமுடியாதுள்ளதாக முல்லைத்தீவு மாந்தை கிழக்கு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Leave a comment