போலி டொலர் நோட்டுக்களை அச்சடித்த மூவரை தியத்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், போலி டொலர் நோட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று தியத்தலாவையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தியத்தலாவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, விரைந்த பொலிஸார் குறிப்பிட்ட வீட்டினை சுற்றி வளைத்தபோது போலி டொலர் நோட்டுக்கள் அச்சடித்துக்கொண்டிருந்த நிலையிலேயே குறித்த நபர்களை கைது செய்துள்ளனர்.
அத்துடன் அச்சடித்து வைக்கப்பட்டிருந்த 5200 போலி டொலர் நோட்டுக்கள் மற்றும் அந்நோட்டுக்களை அச்சடித்த கணனி இயந்திரத் தொகுதிகள், வர்ணங்கள் அடைக்கப்பட்ட போத்தல்கள் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டிருக்கும் நபர்கள் விசாரணையின் பின்னர் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவதுடன், கைப்பற்றப்பட்ட நோட்டுக்கள் மற்றும் ஏனைய பொருட்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுமென்றும் தியத்தலாவைப் பொலிஸார் தெரிவித்தனர்.