புலம்பெயர்ந்தவர்கள் நாடு திரும்ப அமைதியான சூழல் உறுதிசெய்யப்பட வேண்டும்- இரா.சம்பந்தன்

1110 0

புலம் பெயர்ந்தவர்கள் நாட்டிற்குத் திரும்பி வருவதற்கு அமைதியானதும் வன்முறையற்றதுமான சூழலை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

´2009ம் ஆண்டு வரை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக இடம்பெயர்வுகளை சந்தித்திருந்தனர்.

தமிழ் மக்கள் உள்நாட்டிற்குள் இடம்பெயர்ந்தது மட்டுமல்லாது பெரும் எண்ணிக்கையானோர் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்களில் அந்த நாடுகளில் பிரஜாவுரிமை பெறாத இலங்கையர்களுக்கு நாட்டின் வாக்குரிமையை பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், இன்று நாடு வேறு நிலைமையில் காணப்படுகிறது. அதேபோல் எதிர்காலத்தில் கடந்த காலங்களை போன்ற சூழல் ஏற்பட்டுவிடாமல் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

ஜனநாயகம், மனித உரிமைகள், சட்ட ஆட்சி, சமத்துவம், நீதி, பாரபட்சமின்மை, சம அந்தஸ்து உள்ளிட்ட விடயங்கள் அரசியலமைப்பு ரீதியாக உள்வாங்கப்படும் போதே அவர்கள் திரும்பி வருவதற்கான சாத்தியம் ஏற்படும்´ என்று எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிட்டுள்ளன

Leave a comment