அத்துமீறும் மீனவர்களுக்கு மீனவர்களுக்கு எதிராக புதிய சட்ட மூலம் நாளை நாடாளுமன்றத்தில்

201 0

சட்டவிரோதமாக கடற்பரப்புக்குள் அத்துமீறுவதற்கு எதிராக புதிய சட்ட மூலம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனூடாக இழுவை மற்றும் டிங்க்கி படகுகள் மூலம் சட்டவிரோத அத்துமீறல்களை தடுக்க முடியும்.

அத்துடன் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் சட்டவிரோத படகுகளின் பொருட்டு இதுவரை காலமும் இருந்த தண்டப்பணம் ஒரு மில்லியனில் இருந்து 100 மில்லியன் வரையில் அதிகரிக்க குறித்த சட்டமூலத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதுபோல் சட்டவிரோதக அத்துமீற பயன்படுத்தும் மீனவ படகின் பொருட்டு விதிக்கப்பட்டிருந்த தண்டப்பணம் 50 ஆயிரத்தில் இருந்து 5 லட்சம் வரையில் அதிகரிக்க குறித்த சட்டமூலம் வழிவகுக்கும் என மீன்பிடித்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a comment