சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலகம் தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென அண்மையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் ஊடாக பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்கில் நிறுவனம் பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலகம் தெரிவித்துள்ளது.யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு முதல் தடவையாக ஆக்கபூர்வமான வழிகளில் காணாமல் போனவர்கள் மற்றும் அவர்களது குடும்பம் தொடர்பிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு சட்ட மற்றும் நிர்வாக ரீதியான சில தீர்வுகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.