மஹிந்த ராஜபக்ஸவின் குடியுரிமையை பறிக்க சதித் திட்டம் – டலஸ் அழப்பெரும

391 0

dalas_CIமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவின் குடியுரிமையை பறிக்க சதித் திட்டம் தீட்டப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.மஹிந்தவின் குடியுரிமை பறிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சில தரப்பிலிருந்து வெளியாகும் செய்திகளை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மல்வத்து பீடத்தை  இரண்டாக பிளவடையச் செய்ய மஹிந்த சதித் திட்டம் தீட்டியதாகவும் இது குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழு ஒன்றை நிறுவுமாறும் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க திட்டமிட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து அவர் இவ்வாறு கருத:து வெளியிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ ஓர் சிறந்த பௌத்தர் எனவும், மஹா சங்கத்தினருக்கு இடையில் பிளவினை ஏற்படுத்த ஒரு போதும் அவர் முயற்சித்திருக்க மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராபஜக்ஸவை அரசியல் ரீதியாக மலினப்படுத்தும் எந்தவொரு காரியத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் முதல் பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை அரசியல் காரணிகளுக்காக பறித்த ஐக்கிய தேசியக் கட்சி, மஹிந்தவின் குடியுரிமையையும் அவ்வாறு பறிக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.