குப்பைகளை வெளியேற்றுவதற்காக விஞ்ஞான ரீதியான முறைமை விரைவில் அறிமுகம்

268 0
குப்பைகளை வெளியேற்றுவதற்காக விஞ்ஞான ரீதியான முறைமை ஒன்று விரைவில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என என கார்தினல் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
கொழும்பு நகரில் குப்பைகள் கொட்டப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இவற்றை எவ்வாறு வெளியேற்றுவது என்பது, கொழும்பை நிர்வாகம் செய்பவர்களுக்கு கடினமானதாக இருக்கும்.
குப்பைகளை ஒவ்வொரு இடங்களில் குவிப்பதனூடாக பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.
மீதொட்டுமுல்லை சம்பவத்திலிருந்து பாடமொன்றைக் கற்க வேண்டும் என கார்தினல் மெல்கம் ரஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை பல வருடங்களாக ஆட்சி செய்தவர்கள் இது குறித்து ஒரு திட்டமிடலை செய்திருக்கவில்லை.
அதனால்தான், இந்தப் பிரச்சினை ஒரேடியாக பாரிய பிரச்சினையாக தெரிகிறது.
எனவே, விஞ்ஞான ரீதியான முறைமையொன்றைப் பயன்படுத்தி குப்பைகளை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பது பொருத்தமானதாக இருக்கும்.
இந்த நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் கார்தினல் மெல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

Leave a comment