சைட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பு: அமைச்சர்களிடையே கருத்து முரண்பாடு

244 0

சைட்டம் நிறுவனம் தொடர்பில் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் விசாரணைகளில் கலந்துகொள்ளாதிருக்க அரசாங்க கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தீர்மானம் எடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றிரவு (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பில் அமைச்சர்கள் தலையீடு செய்து தேவையற்ற ஒன்று என்றும், இவ்வழக்கை சட்ட மா அதிபருக்கு முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்குமாறும் இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கோரியுள்ளனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் சம்பிக்க ரனவக்க, இந்த சைட்டம் நிறுவனத்தை ரத்து செய்ய வேண்டும் என மாற்றுக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

சைட்டம் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கழிந்துள்ள நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவிப்பதானது புதுமையானது என அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சர் சம்பிக்கவின் கருத்துக்குப் பதிலளித்துள்ளார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்களான, லக்ஷ்மன் கிரியெல்ல, ரவுப் ஹக்கீம், விஜயதாச ராஜபக்ஷ, சுஜீவ சேனசிங்க, அஜித் பி.பெரேரா, ஹர்ஷத டி சில்வா, கருணாரத்ன பரணவிதாரன மற்றும் எரான் விக்கிரமத்ன ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

Leave a comment