சர்­வ­தேச சக்­தி­க­ளுடன் இணைந்து நாட்டை அழி­விற்கு இட்டுச்செல்ல கூட்டுச்சதி-பிர­சன்ன ரண­துங்க

247 0

உல­கி­லேயே மிக ஆட்சி என்றால் அது  தற்­கா­லத்தில் எமது நாட்­டி­லுள்ள ஆட்­சி­யாகும். சர்­வ­தேச சக்­தி­க­ளுடன் இணைந்து நாட்டை அழி­வுப்­பா­தையில் இட்டுச் செல்லும் கூட்டு ஆட்­சியே   இன்று நாட்டில் இடம்­பெ­று­வ­தாக கூட்டு எதி­ர­ணியின் ஒருங்­கி­ணைப்­பாளர் பிர­சன்ன ரண­துங்க எம்.பி. தெரி­வித்­துள்ளார்.

மினு­வாங்­கொடை பகு­தியில் இடம்­பெற்ற கூட்டு எதி­ர­ணியின் இளம் உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்­பொன்றின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தற்­போ­தைய அர­சாங்கம் தமது தவ­று­களை மறைத்­துக்­கொள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவை தைல­மாக பயன்­ப­டுத்­திக்­கொள்­கி­றது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவினால் நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளுடன் ஒப்­பீட்­ட­ள­வில் பார்க்­கின்ற போது தற்­போ­தைய அர­சாங்­கத்­திற்கு தாம் ஆரம்­பித்த அபி­வி­ருத்தித் திட்டம் என்று மக்­க­ளி­டத்தில் கூற ஒரு விடயம் எதுவும் இல்­லா­தி­ருப்­பது வேடிக்­கை­யாகும்.

உல­கத்­தி­லேயே மிக மோசமான அர­சாங்கம் ஆட்சி செய்­கின்­றது. அத­னுடன் சில குழுக்­களும் கூட்­டாக சேர்ந்­து­கொண்­டுள்­ளன. இவர்­கள் நாட்டை அழிக்க கூட்டு சேர்ந்­த­வர்கள். சர்­வ­தேச சக்­தி­க­ளுடன் சேர்ந்து நாட்டை அழிக்க முற்­ப­டு­கின்­றார்கள்.

அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் மக்­களை குரு­டர்கள் என்று நினைத்து பேசிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். வீதியில் இறங்­கினால் இன்று அர­சாங்­கத்தின் நிலைமை என்­ன­வென்­பது தெரி­ய­வரும். எங்கும் குப்­பைகள் நிறைந்து காணப்­ப­டு­கின்­றன.

அதனால் இன்று டெங்கு நோய் பெரு­கி­யுள்­ளது. அதனை கட்­டுப்­ப­டுத்த வழி­யில்­லாத அர­சாங்­கம்தான் தற்­போது கூட்டு எதி­ர­ணியை மட்­டு­ப்ப­டுத்த நினைக்­கின்­றது. அதனால் நாட்டில் இடம்­பெ­று­கின்ற சகல பிரச்­சி­னை­களுக்கும் மஹிந்­தவே காரணம் என்­கின்­றார்கள்.

மஹிந்­தவை நிந்­தித்­தாலும் தற்­போ­தைய அர­சாங்கம் அவரின் செயற்­றிட்­டங்­களை திறந்து  வைத்து தனக்கு புள்­ளி­யிட்­டு­க் கொள்­கின்­றது என்­பது சக­ல­ருக்கும் தெரி யும். அதேபால் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஆட்­சிக்கு வரும் முன்னர் மஹிந்­தவால் முடி­யாது. நாட்டை எமக்கு தாருங்கள் என்­றார்கள்.

ஆனால் இன்று மஹிந்­தவால் முடிந்­தது கூட இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளால் முடி­யாது என்று மக்கள் உணர்ந்து கொண்­டுள்­ளனர். இவ்வாறான ஆட்சியாளர்கள் மஹிந்த ராஜ­பக் ஷவை ஏசுவதற்கான களமான எமது நாடும்  முன்னாள் ஜனாதிபதியினாலேயே காப்பாற்றப்பட்டது.

அரசாங்கத்தின் காலம் சரிபாதியாக முடிந்த பின்பும் கூட நாட்டில் ஒரு முன்னேற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Leave a comment