சென்னையில் இருந்து திருச்சி, நெல்லைக்கு சிறப்பு ரெயில்

356 0

201608061005134963_southern-railway-announcement-for-Trichy-Tirunelveli-special_SECVPFகூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து திருச்சி, நெல்லைக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்பட உள்ளன என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
திருச்சியில் இருந்து 13-ந்தேதி பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் (06024) இரவு 9 மணிக்கு எழும்பூர் வந்தடைகிறது. அது போல 16-ந்தேதி எழும்பூரில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு திருச்சி சென்றடைகிறது.இந்த ரெயில் அரியலூர் விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் நிலையங்களில் நின்று செல்லும்.

ஆகஸ்ட் 26-ந்தேதி எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு கட்டண ரெயில்(06001) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது. 28-ந்தேதி நெல்லையில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல்,கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி நிலையங்களில் நின்று செல்லும்.

வருகிற 13-ந்தேதி எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு நெல்லைக்கு சிறப்பு ரெயில் (06025) புறப்பட்டு செல்கிறது. இந்த ரெயில் மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.

இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரி புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.