தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது வெறும் வார்த்தையாகவே உள்ளது

415 0

201608061025555233_Kanimozhi-says-Full-Prohibition-is-an-impressive-term-in-TN_SECVPFதமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது வெறும் வார்த்தையாகவே உள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை. இதனால் தமிழக தொழிலாளர்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதன் காரணமாக ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இது குறித்து தமிழக அரசு, மத்திய அரசிடம் பேசி சுமூகமான முடிவு எடுக்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு பிரச்சனைகள் ஏற்பட்டபோது அந்தந்த மாநில முதல்வரிடம் பேசி சுமூகமான தீர்வு காணப்பட்டது. ஆனால் தற்போது முதல்வர் அவ்வாறு பேசுவதாக தெரியவில்லை.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் மதுக்கடைகளை அரசு மூடியதாக தெரியவில்லை. தமிழகத்தில் பூரண மது விலக்கு என்பது வெறும் வார்த்தையாகவே உள்ளது. சட்டசபையில் மதுவிலக்கு பற்றி பேசி கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா? என்பது சந்தேகமாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.