எம்.ஏ.சுமந்திரனின் உதவி எனக்கும், தமிழ் மக்களுக்கும் தேவை- இரா.சம்பந்தன்

321 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உதவி தனக்கும், தமிழ் மக்களுக்கும் தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நிழ்வு ஒன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தான் ஜோன் கெரியைச் சந்தித்தபோது, ‘நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரென்று சொன்னேன்.ஜோன் கெரி இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதில் உங்களுக்குப் பெரிய பங்கிருக்கின்றது எனக் கூறினார். அடுத்தநாள் நாங்கள் அவரைச் சந்தித்து எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருப்பதன் பிரகாரம், அரசியல் தீர்வு சம்பந்தமாக அவருக்கு விளக்கம் கொடுத்தேன்.

உண்மை அறியப்படவேண்டும். உண்மை அடிப்படையில் நீதி வழங்கப்படவேண்டும். சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும் என நாங்கள் வலியுறத்தினோம்.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜோன் கெரியைச் சந்தித்ததா? பிரதமர் மோடியைச் சந்தித்ததா? பிரமர் கமரூனைச் சந்தித்ததா எனக் கேள்வி எழுப்பிய அவர், இந்தச் சந்திப்புக்கள் அனைத்தும் நடைபெற்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்தத் தலைவருக்குமிடையில். அந்த ஒவ்வொரு சந்திப்பிலும் திரு சுமந்திரன் எனக்குப் பக்கமாக இருந்து பெரும் உதவியாக இருந்திருக்கிறார்.

அவரது உதவி தொடர்ந்தும் எங்களுக்குத் தேவை. இந்த விடயங்களைக் கையாளுகின்றவன் என்ற வகையில் நான் பகிரங்கமாகக் கூறுகின்றேன் சுமந்திரனின் உதவி எனக்கும் தமிழ் மக்களுக்கும் தேவை எனத் தெரிவித்தார்.

கறுமங்கள் செய்யும் தம்பி சு தமிழினத்துக்கு தேவை

தொடர்ந்து கறுமங்கள் செய்யும் தம்பி சு தமிழினத்துக்கு தேவை…. சாம்காலத்திற்கு காலம் ஒரு தமிழின துரோகி தோன்றுவது வழமை, இக்காலத்துக்கான சிறந்த துரோகி திரு.சாம் அய்யாவால் சு க்கு வளங்கப்பட்ட போது பதிவு செய்யப்பட்டது இந்த கறுமத்திற்கு வாக்களித்த மக்களே நீங்கள் தவறு செய்யவில்லை, இவனை கொண்டு வாக்கு பிச்சை கேட்ட சாம் தான் தவறிழைத்துள்ளார்.

Gepostet von எள்ளெண்ணை PAPER am Montag, 3. Juli 2017

Leave a comment