பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து கருணாசேன ஹெட்டியாராச்சி விலகியுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவராக பதவி வகித்த கருணாசேன ஹெட்டியராச்சியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்குமாறு பல சிவில் அமைப்புகள் கடந்த காலங்களில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வந்தன.
கருணாசேன ஹெட்டியாராச்சி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் விலகியுள்ளதால், சட்டமா அதிபர் திணைக்களத்தில் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகிக்கும் வைத்தியரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
எவ்வாறாயினும் தான் இன்னும் பதவியை ராஜினாமா செய்யவில்லை என கருணாசேன ஹெட்டியாராச்சி ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
தான் இன்றும் அலுவலகத்திற்கு வந்ததாகவும் தன்னை பதவியில் இருந்து நீக்குவது குறித்து தாம் இன்றும் அறியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.