அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு அமோக ஆதரவு

355 0

201608061044286775_Overwhelming-support-for-Clinton-in-the-US-presidential_SECVPFஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு அமோக ஆதரவு இருப்பது கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.ஹிலாரி கிளிண்டன் 48 சதவீதமும், டொனால்டு டிரம்ப் 33 சதவீதமும் பெற்றுள்ளனர். இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் ஹிலாரி கிளிண்டன் 3 சதவீத வாக்குகளே கூடுதலாக பெற்று இருந்தார்.மெக்கிளாட்சி- மாரிஸ்ட் என்ற நிறுவனம் பொது மக்களிடம் கருத்து கணிப்பில் ஈடுபட்டது. முடிவில் டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் 15 சதவீதம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அதிபர் தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு அதிகம் உள்ளது என்பதை அறிய நாடு தழுவிய கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் களம் இறங்கியுள்ளார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இவர் கோடீசுவரர் ஆவார்.

மேலும் வால் ஸ்ட்ரீட் ஜோன்ஸ் மற்றும் என்.பி.சி. நியூஸ் நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பும் வெளியிடப்பட்டது. அதில் டிரம்பை விட ஹிலாரி 9 சதவீதம் அதிக வாக்குகள் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இவை நடத்திய கருத்து வாக்கெடுப்பில், ஹிலாரி 5 சதவீதம் அதிகம் பெற்றுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி சராசரியாக ஹிலாரி கிளிண்டன் 6.8 சதவீத வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணியில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.