பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களுக்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பணிக்கு திரும்புமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் புறக்கணித்துள்ளனர் .
இன்று வழமை போன்று கடமைக்குத் திரும்பாத தற்காலிக மற்றும் பயிற்சி ஊழியர்கள் பணியில் இருந்து நீங்கியவர்களாக கருதப்படுவார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா நேற்று எச்செரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் மிரட்டல் நடவடிக்கை மூலம் தங்களை கடமைக்கு அழைக்க முடியாது என்று பல்கலைக்கழக கூட்டு தொழிற்சங்க ஒன்றமைப்பின் ஒருங்கிணைப்பாளர எட்வட் மல்வத்தகே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 27ம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்படுகின்ற வேலை நிறுத்தம் காரணமாக நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழில்சங்க நடடிவடிக்கையால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.