இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான மனு ஒன்று ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளர் அந்தோனியோ குட்டேரெஷிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் செயற்படும் புலம்பெயர்ந்த அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டில் நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இதனை அடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளரை சந்தித்து, இந்த மனுவைக் கையளித்துள்ளனர்.
கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் 100 தினங்களுக்கு மேலாக காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.