ஆபிரிக்க நாடுகளில் இலங்கையின் தேயிலையை பிரபல்யப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியை பயன்படுத்திக் கொள்வதாக, வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேயிலைக்கு சர்வதேச அளவில் அதிக கிராக்கி இருக்கிறது.
இதனைப் பயன்படுத்தி ஆபிரிக்காவிலும் இலங்கை தேயிலைக்கான சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.