வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில், 13 வயது சிறுவனிடம், இன்று சாட்சி பதிவுசெய்யப்பட்டது.
வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் விசாரணை மன்றின் முன்னிலையில், இன்று நான்காவது நாளாக இடம்பெற்றது.
வித்யா படுகொலை செய்யப்பட்ட இடத்தில் முனகல் சத்தம் கேட்டதாக, 13 வயதான சிறுவன் தனது சாட்சியத்தில் கூறியுள்ளார்.
“சம்பவம் இடம்பெற்ற நாளில் நானும் எனது, நண்பனும் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தோம்.
“இதன்போது எனது நண்பனின் பாதணி கழன்று விழுந்து விட்டது. அதனை எடுப்பதற்காக பின் நோக்கி ஓடிய போது முனகல் சத்தம் கேட்டது” என, சிறுவன் தனது சாட்சியத்தில் கூறியுள்ளார்.
அத்துடன், முனகல் சத்தம் கேட்ட பகுதி பாழடைந்து காணப்பட்டதால், பேய் என நினைத்து பயந்து ஓடிவிட்டதாகவும் சிறுவன் குறிப்பிட்டுள்ளார்.
அந்த இடத்திலிருந்து ஓடும்போது, வித்தியா கொலை வழக்கின் இரண்டாவது சந்தேகநபர் வீதியில் நின்று கொண்டிருந்ததை தான்
கண்டதாகவும் சிறுவன் கூறியுள்ளார்.