போர்க்குற்றவாளிகளின் பெயர்களில் புதிய சிங்களக் கிராமங்கள் அமைப்பு

259 0

இறுதிக்கட்டப் போரின்போது 56, 57, 58ஆம் படைப்பிரிவுகளின் கட்டளைத் தளபதிகளாக செயற்பட்ட தளபதிகளின் பெயர்களில் வீடமைப்புக் கிராமங்கள் (சிங்களக் கிராமங்கள்) உருவாக்கப்படும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அவரின் நினைவாக அவரின் பெயரில் புத்தளம், ஆனமடுவ பகுதியில் கிராமமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நந்திக்கடல் சமரின்போது இராணுவத்தின் நெடுந்தூர தாக்குதல் படையணியில் பணிபுரிந்த இராணுவச் சிப்பாய் ரஞ்சித் பிமேசிறி சமரின்போது உயிரிழந்தார்.

“வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சால் எதிர்காலத்தில் அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டங்களுக்கு கிராமங்களுக்கு போரை முடிக்க பாடுபட்ட இராணுவத்தினரின் பெயர் வைக்கப்படும்.

டென்சில் கொப்பேகடுவ, விஜே விமலரத்ன, சானக பெரேரா, 56, 57, 58, 59ஆம் படைப்பிரிவுகளின் தளபதிகளாகச் செயற்பட்ட சவேந்திர சில்வா, பிரசன்ன சில்வா, ஜயத் டலஸ், கமால் குணரட்ன மற்றும் இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பெயரிலும் கிராமங்கள் அமைக்கப்பட்டு இராணுவத்தின் புகழ் நிலைநிறுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இறுதிப்போரின் போது மேற்படி படைப்பிரிவுகளே அதிகளவு போர்க்குற்றங்களிலும், மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகளிலும் ஈடுபட்டன என்ற குற்றச்சாட்டு அனைத்துலக மட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment