ஜேர்மனியின் பவேரிய மாநிலத்தில் இன்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி, 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, 31 பேர் காயமடைந்துள்ளனர்.
வேகமாகச் சென்ற பேரூந்து, எதிரே வந்த லொறி ஒன்றுடன் மோதுண்டு தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்தே, குறித்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த விபத்து ஜேர்மன் நேரப்படி காலை 7 மணியளவில் ஸ்டம்பார்க் (Stammbach) என அழைக்கப்படும் கிராமத்தில் ஏற்பட்டதாகவும் விபத்துக்குள்ளான பேரூந்தில் சுமார் 48 பேர் பயணித்ததாகவும் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.