27 வருடங்களின் பின் மகிழ்ச்சியில் திலைத்துள்ள மயிலிட்டி மக்கள்!

317 0

27 வருடங்களின் பின்னர் மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய 54 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் இன்று (03) விடுவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியை விடுவிப்பதற்கான ஆவணத்தினை யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி, அம் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் கையளித்தார்.

வலி. வடக்கு மயிலிட்டி ஜே/151 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பகுதி மற்றும் மயிலிட்டி துறைமுகம் ஆகியனவே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன. 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் திகதி வலி. வடக்கு மக்கள் தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறியிருந்தார்கள்.

இதற்கமைய, 27 வருடங்களின் பின்னர், தமது சொந்த மண்ணில் கால் தடம் பதித்ததையிட்டு அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன்படி, அப் பகுதிக்குச் சென்ற மக்கள் தமது நிலங்கள் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள மிகப் பிரபல்யமான கண்ணகி அம்மன் ஆலயத்தினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மீனவ குடும்பங்கள் தமது படகுகளை மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளதுடன், மகிழ்ச்சியில் திலைத்துள்ளதையும் காணக்கூடியதாகவுள்ளது.

Leave a comment